முப்புறமும் நீர் நிறைந்திருக்க ...

முப்புறமும் நீர் நிறைந்திருக்க
வற்றா நதிகள் சிலவும்
தப்பாமல் தம் வழி நடக்க
அற்புதம் என்ன செய்துவிட்டார்
ஆள்பவர்கள் தாம் எமக்கு
அந்தோ ! பரிதாபம் !!
அன்றாட வாழ்விற்கு
இன்றும் அலைகின்றார்
தண்ணீர் குடம் அதை
தலைமேல் சுமந்தபடி
அந்தோ ! பரிதாபம் !!
எங்கே நாம் செல்கிறோம்
என்றே தான் தெரியாமல்
அந்தோ ! பரிதாபம் !!

எழுதியவர் : (23-Oct-13, 11:14 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 165

மேலே