நான் மழை!

கறுத்த முகில் அழைத்த போது
கண்ணீர் சிந்தி அழுதேன் - இன்று
செழித்த வனம் கருகிப்போக
உறைந்திருக்க நேர்ந்தேன் !

படித்ததெல்லாம் மறந்து போனால்
மடமை தான் வரும் - நான்
நான் வர மறுத்து அடம் பிடித்தல்
வறுமைதான் வரும் !

ஓசோனில் துளையிட்டு
அண்டம் சுற்றும் மனிதா - நீ
உயிர் வாழ நான் வேண்டும்
மறந்தால் நல்லதா ?

வரும் என்னை அழைக்க ஒரு
மயிலாட்டம் இல்லை - நீ
இருப்பதெல்லாம் தோண்டிவிட்டால்
மண்ணீரும் இல்லை !

அவன் கண்டதையே கண்டடைந்து
பரிசு வாங்கும் உன்னில் - நான்
என்னத்தை கண்டு எதுரைக்க
மனித மனம் தன்னில் !

வற்றாது நீர் என்று - நீ
தட்டிக்கழித்து வாழ்ந்தால் - உன்
"சுற்றமும் வாழாது" நினைத்துக்கொள்
நான் சீற்றம்கொண்டு பார்த்தால் !

நான் முடிவெடுத்து விட்டேன் - இனி
விதி உனது கையில் - உன்
மதி உணர்ந்து நீயும் - காப்பு
செயல் செய்ய பார் - இந்த பாரில் !

எழுதியவர் : (24-Oct-13, 11:00 am)
பார்வை : 61

மேலே