என் கவியரசுக்கு
கவியரசு நம் தமிழ் மண்ணிற்கு கிடைத்த
பெரும் பரிசு
வாசம் வீசும் மலர்களைப்போல்
இவன் வரிகள் காற்றில் வீசியது
வாழ்வின் உருவ வடிவங்கள்
இவன் பாடலின் மூலம் பேசியது
வெள்ளைவான காகிதமோ
இவன் கவிதையை ஏந்த ஏங்கியது
வெறுக்கும் கவிகள் அற்றதனால்
இவன் கவிகள் முழுதும் சிறந்தது
பிறப்பில் எட்டாய் பிறந்து
புகழ் வானைவிடவும் உயர்ந்து
எட்டாத உயரம் அடைந்து
இவன் புகழோ மேலோங்கி பறந்தது
எண்ணற்ற கவிதை தொகுப்பை
இவன் எண்ணங்கள் கடலாய் பெருகி
எழுத்துக்கள் வடிவால் குறுகி
நம் மனதினை வெகுவாய் கவர்ந்தது
தமிழர் முழுதும் இழந்தது
இந்த கலைஞன் மண்ணில் இறந்தது
கவியின் அரசாய் திகழ்ந்தது
தமிழ் கவிக்கே பெருமை சேர்த்தது