ஆண்டுதோறும் விழாக்கள்
ஆசைக்கு ஒரு அளவு உண்டா?
பிறந்தோம், வாழ்ந்தோம்
என்று சத்தமில்லாமல்
வாழ்ந்து சலனமில்லாமல்
உவகையுடன் உதவி செய்து
மற்றவர்க்கு தொல்லையில்லாமல்
நடந்து வந்தோம் போனோம்
என்று வாழாமல்
ஒவ்வொரு பிறந்த நாளுக்கும்
ஒரு ஏற்பாடு ,ஒரு கொண்டாட்டம்
ஒரு விருந்து, ஒரு ஹோமம்
என்று நம்மிடையே பலர்
வழக்கமாக கொண்டு உள்ள போது
அறுபதாம் கல்யாணம் என்று
பெரு விழா எடுத்து
மிகப் பெரும் செலவு செய்து
கெண்டை வேட்டிகளும்
சரிகைப் புடவைகளும் பரிசளித்து
பின் எழுபது ,எண்பது என்று
ஆண்டுதோறும் கொண்டாடி
ஆயுட்காலத்தை நீட்டிக்க
செய்யும் வேண்டுதல்கள்
எதற்கோ என்று அறியவில்லை.