தோற்றமும் அழகும்
கரு வண்டு கண்கள்
என்று சொல்லும் போதே
ஓர் அழகு மிளிரும்
பரந்த நெற்றி
என்று பார்க்கும் போதே
ஒரு விசாலம் தெரியும்
கூர்மையான முக்கு
என்று கருதும் போதே
ஒரு சுடர் தெறிக்கும் .
பவள வாய்
என்று குறிக்கும் போதே
ஒரு செம்மை மின்னும்
முத்துப் பற்கள்
என்று நோக்கும் போதே
ஒரு ஒழுங்கு விரியும் .
சங்குக் கழுத்து
என்று வியக்கும் போதே
ஒரு பளீர் வெண்மை படரும்.
கனிவும், பரந்த நோக்கும்
தீட்சனி யமும் , சிரிப்பும்
வரை முறையும் நேர்மையும்
ஒன்று சேரக் காண்பது அதி அற்புதம்,