இன்னொரு நாள்

இரவு காதலனுடன் ஓடிப்போன நிலாமீது
கோபித்து சிவந்த விடிகாலை செவ்வானம்.
போர்க்கால ஒத்திகைபோல் வானில் அணி
வகுத்து விடியலை வரவேற்கும் விந்தை பட்சிகள்.
வந்துவிட்டேன் வந்துவிட்டேன் என ஊளை இட்டு
எங்கோ விரைந்தோடும் தொடர்வண்டி.
மெல்லிய தென்றல் மேனியை தழுவும்.
துள்ளிய உள்ளம் இளங்காலையை ருசிக்கும்.
இன்னுமொரு நாள் புலர்ந்தது - இம்சையாய்
கழியபோகும் இயந்திரமாய் இன்னொரு நாள்.

எழுதியவர் : கிருஷ்ணமுர்த்தி D (31-Oct-13, 10:17 am)
Tanglish : innoru naal
பார்வை : 120

மேலே