ஏமாற்றங்கள்தான் எத்தனை

நிலவின் ஒலியினிலே !
நிலத்துநிலவாய் நீ !
என் அருகினிலே

நம் கால்களை முத்தமிட
போட்டியிட்ட கடல் அலைகள்
முடியாமல் தோற்றுப்போனது...
கரையோரம் தடம் பதித்து
கனவின் கள்ளத்தனத்தை
உன் காதோரம் நான் கசிந்ததை,
காற்று கொண்டுசென்றதென்னவோ?

மறைவில்லா மணல்ப்பரப்பிலே,
இருள் சூழ்ந்தும், நாம் தனிமையிலே
படபடக்கும் என் இதயம்
பட்டும்படாமல் கேக்குதடி...
புரிந்தும் புரியாமல்
நீ நடத்தும் நாடகம்
அப்பட்டமாய் தெரியுதடி...

இரு உடல் வேஷமிட
மனம் மட்டும் மோகம் பெற
இதழ் மத்தியில் இடைவெளி
குறையுமோ ஒரு நொடி...

போலி நடிப்பு பொய்யானது
முத்திதழ்கள், முண்டியடித்து மூழ்கிப்போனது.
ஆள் அசந்தால் அல்லும் காற்றில்
எங்களுக்கு மட்டும் மூச்சித்தினருவது
என்ன மாயமோ?

போதும் போதும் என்றபோதிலும்
பிரிய தவித்த இதழ்கலதை,
பிரித்துவைத்த கைகடிகாரம் தேவைதானா?
வெறுத்தது இருமனம்...

வந்த வழி கால்கள் திரும்ப
காத்திருந்த கடல் அலைகளுக்கு,
தினம் தினம் ஏமாற்றங்கள்தான் எத்தனை ?

எழுதியவர் : ரா. ராஜ் நாராயணன் (2-Nov-13, 2:30 am)
சேர்த்தது : Raj Kumar
பார்வை : 147

மேலே