உறவுக்காரர்கள்

வேரும் கிளையும்
வேறுவேறு என்றால்
தாவரம் இருக்காது!

சொந்தம் பந்தம்
இல்லையென்றால்
வாழ்வு ருசிக்காது!

கண்ணீர் சிந்தும்
கரிசன சொந்தம்
காசு என்றதும்
கதவை அடைக்கும்!

வருவாய் இல்லாவிட்டால்
வாசல்வரைக்கும் தான்
அனுமதிக்கும்!

வாழ்ந்த போது
வந்த சொந்தம்
தாழ்ந்த போது
வரவில்லையே!

தொட்டில் சொந்தம்
என்பதும்,
கட்டில் சொந்தம்
என்பதும்
காசு உள்ளவனுக்கே
சொந்தமானது!

பெரும்பாலும்
எதிரிகளாய் இருப்பது
நம் உறவினர்களே!...

எழுதியவர் : கோடீஸ்வரன் (2-Nov-13, 7:56 pm)
பார்வை : 130

மேலே