முகமூடி முகங்கள்

பெயரோடு பிறந்தோர் இல்லை,
பெயரில்லாமல் மடிந்தோரும் இல்லை,

இறப்பை நோக்கி,
தொடங்கிய பயணத்தில் தான்,
எத்தனை எத்தனை,
முகமூடி முகங்கள்!!

படைத்தவன் தந்த,
ஒரு முகத்தை,
முகமூடி இட்டு,
வாழும் எல்லோரும்,
படைப்பாளியே!

முகமூடி இட்டால்,
தவறு என்று சொல்லும்,
நாம் தான்,
பல முகமூடி முகங்களை,
அடையாளம் தெரியாமல்,
இருக்கிறோம்!

அரசியல் என்று சொல்லி,
நாட்டை கூறு போடும்,
மனிதன் தனக்கு இட்டு,
கொண்ட முகமூடி,
அரசியல்வாதி!

இயலாமையும் தன்னிடம்,
ஏதும் இல்லாமையும்,
சேர்ந்த மனிதன்,
மக்களை அழிக்க,
இட்டு கொண்ட முகமூடி,
தீவிரவாதி!

படைத்த இறைவனின்,
மறு உருவம் நான் என்று,
மக்களின் நம்பிக்கையே,
மண்ணாக்கும் மனிதன்,
இட்டு கொண்ட முகமூடி,
ஆன்மீகவாதி!

ஒருவனுக்கு ஒருத்தி என்று,
வாழ்வது எனக்கு ஒவ்வாமை என்று,
சொல்லும் மனிதன்,
தனக்கு இட்டு கொள்ளும்,
முகமூடி எய்ட்ஸ்!

பிள்ளைக்காக வாழும்,
பெற்றோர்கள் மத்தியில்,
அவனுடைய சந்தோசத்திற்கு,
தவறாக பெற்ற பிள்ளையே,
தெருவில் விட்டு,
அவனுக்கு இடும் முகமூடி அனாதை!

அமைதியே இல்லாமல்,
நாம் வாழ்ந்து கொண்டு,
அமைதியில் மட்டும் வாழ்பவர்களுக்கு,
நாம் இட்ட முகமூடி பைத்தியம்!

உலகில் யாருமே,
உண்மை இல்லை,
எல்லோர்க்கும் முகமூடி,
முகம் தான்,
பிடிக்கும் என்றால்,
இந்த உலகிலே,
வாழும் நான் மட்டும்,
விதிவிலக்கா,
ஆம்,
கற்பனையில் காவியம்,
படைத்து,
நான் கம்பனை மிஞ்ச,
பார்க்கிறேன் என்று,
கம்பனின் முகமூடியை,
இட்டு கொள்ள ஆசைபடுகிறேன்!!!!

எழுதியவர் : கார்த்திக் (6-Nov-13, 7:58 pm)
பார்வை : 1203

மேலே