பொம்மையும் நானும்

நான்
அதிகநாள் வெளியூரில் தங்கிவிட்டால்
யாரும்
வந்தவுடன் பேசக்கூடாது என
அவர்களுக்குள் கட்டுப்பாடு விதித்துவிட்டு….

என் காரின்
ஹாரன் சப்தம் கேட்டவுடன்

அவர்களை அறியாமல் ஆர்ப்பரித்து விடுகின்றன
என் எல்லா பொம்மைகளும்..

எழுதியவர் : மஹாதேவன் காரைக்குடி (9-Nov-13, 12:38 pm)
பார்வை : 55

மேலே