உவர்ப்பு

வழிந்த தேநீரைக் கவனியாது
மேலெழுந்த தேநீராவிக்கு....

பின் வாசல் பார்த்த
உன் குறு நகைக்கு.....!

என் நாவோரம் தங்கிப்
போன அந்த
உவர்ப்புக்கு......!

வழிந்த தேநீரைக்
கவனியாது
மறைந்து போன தேநீராவிக்கு....!

திரும்பிய
கணம் காய்ந்த
மேசைக் கரைக்கு......!

அதை நக்கச்
சொல்லும்
என் மனக் குரங்குக்கு...!

தகிப்பற்றுப் போன
பின்னும்
மேல் நோக்கியே
கிடந்திருந்த தேநீருக்கு...!

இன்னுமாய்
இருக்கக் கிடைத்த
உனக்கு....!

இருத்தலை உணரத்
தெரிந்த எனக்கு....!

வழிந்த தேநீரைக்
கவனியாது போகும்
அந்த தேநீராவிக்கு...!

எழுதியவர் : நெ.ஹரீஷ் (11-Nov-13, 1:04 am)
சேர்த்தது : Hareeshmaran
பார்வை : 70

மேலே