உண்மையான கவர்ச்சி
ஆணுரிமையோ பெண்ணுரிமையோ
ஆடைக்குறைப்பில்
உடலோடு ஒட்டிய ஆடையில்
பிறர் கவனத்தைத் திருப்புவதிலோ
அடாவடித்தனம் செய்வதிலோ
பணிவின்றி நடப்பதிலோ
தலைதெறிக்கும் வேகத்தில்
வண்டி ஓட்டுவதிலோ,
மேலை நாட்டுப் பைத்தியங்களை
முன்மாதிரியாக்கி
அவர்களைப் போல்
ஆடை அணிகலன்களை
அணிந்து பரவசமடைவதிலோ
இல்லவே இல்லை!
தேவையில்லா உரிமைகளைத்
தேடிச்செல்வது தன்னைத்தான்
அடிமையாக்கி தரங்குறைத்து
கொள்ளும் வீம்புத்தன நாகரிகம்.
பணிவோடு அறிவுத் திறனைப்
பளிச்சென்று காட்டுங்கள்
பலபேர் உமைப் பின்பற்றி
போற்றுவார், முன்னேறுவார்.
அதுவே உண்மையான கவர்ச்சி!