இதாங்க காதல்

காதல்'ன்னா என்ன??

5 வயசு பொண்ணு :
என் பொம்மைய அவன் புடுங்கிட்டு போனான் எனக்கு கோவம் வந்திடுச்சு அவன் சைக்கிள தள்ளி விடலாம்னு போறப்ப
என் பொம்மைக்கு புது சட்ட போட்டு எடுத்துட்டு வருவது.

10 வயசு பொண்ணு :
அவன் சோசியல் சயன்ஸ் புத்தகத்துல கலர் பென்சிலாலக் கிறுக்கிட்ட்டேன் டீச்சர் கேட்டப்ப என்ன மாட்டி விடாம
அவனே முட்டி போட்டு நிறபது .

15 வயசு பொண்ணு :
ரெகார்ட் நோட் ஒன்னா ஒக்கார்ந்து எழுதும் போது அந்த பேனாவ தான்னு வாங்கும் போது அவன் கைல லேசா உரசுவது

20 வயசு பொண்ணு :
நான்கு வருடம் எதையுமே சொல்லாமல் கல்லூரி கடைசி நாளில் விடை பெறும் போது "அப்புறம் எப்ப பார்க்கலாம் ?"
என்று அவன் கேட்டது

25 வயசு பொண்ணு :
கையில ஒத்த ரோசாவோட வந்து என்னைக் கல்யாணம் பண்ணிப்பாயா என்று கேட்டு அவனையே முட்டாளாக்கி கொண்டது .

35 -45 வயசு பெண் மணி :
நான் ரொம்ப களைப்பா இருக்குறதப்பார்த்து நான் காபி போட்டு தரவா என்று அவர் கேட்பது

55 வயசு பெண்மணி :
அவருக்கு மைசூர்பான்னா உயிர் எனக்கு சர்க்கரை நோய் நான் சாப்பிட முடியாதென்று அவரும் சாப்பிடாமல் அதை ஒதுக்குவது

65 வயது பெண்மணி
நான் கடைசி மூச்ச விடும் போது என் கைய பிடிச்சிகிட்டே
என்னையும் கூட்டிட்டு போ என்று அவர் கண்ணீர் விட்டது.

எழுதியவர் : ஜில்லுனு ஒரு ஷாகுல் (12-Nov-13, 2:10 am)
பார்வை : 155

மேலே