உந்தன் பிரிவில் எந்தன் விழிகள்

நான் தேடிய இன் உலகில்.
எனக்கு கிடைத்த காதல் நீ .
எந்தன் தேடிய இதயத்தில்.
உயிரா கிடைத்த காதல் நீ .

நேசித்த என் இதயத்தில்.
ஒளியாக இருபதோ நீ .
காதலை என் இதயத்தில்.
சிறுக ஊட்டியவன் நீயோ .

எந்தன் தனிமையின் புரியாத,
பல பல இராகசியம் நீயோ.
அலையாக என் இதயத்தில்
வந்து அலை மோதுவதோ .

அழியாத உந்தன் நினைவில்
நீ அறியா பல வரம் வேண்டி
நானும் சிறிது சிறிதாக உன்னில்
கொஞ்சம் தொலைந்து விடவா.

நான் உயிரோடு வாழ்வதே....
அழகான உந்தன் நினைவில்.
அழகான அவஸ்தை தந்தாய்.
ஏக்கங்கள் பல, பல தந்தாய் .

உந்தன் பிரிவு. அது எந்தன் வலி .
என்னையே நொடி. கொல்லுதடா.
தொலையாமல் நீ இருக்க நானோ.
தொலைத்து விட்டு தேடுகிறேன்.

உந்தன் பிரிவில் எந்தன் விழிகள் .
ஏக்கம் கொண்டே ,உந்தன் பிரிவின்
இலக்கணம் அறியாமல் விழிக்கிறதே.
விரிவுரை கூறாமல். இதயமே வந்து விடு.

எழுதியவர் : (12-Nov-13, 3:27 pm)
சேர்த்தது : தமிழ் அழகி.
பார்வை : 64

மேலே