பேருந்து நிறுத்தம்

அன்றும் கருப்பாயி பேருந்து நிற்குமிடத்திற்கு வந்தபோது பேருந்து அங்கே நின்று கொண்டிருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பிருந்துதான் இந்த கிராமத்திலிருந்து பேருந்து டவுணுக்கு செல்கிறது. அதுவரை பேருந்திற்காக 2 கிலோ மீட்டர் நடந்துதான் அனைவரும் செல்லவேண்டியிருந்தது. எந்த மகராசன் மனசு வைத்தானே தீடிரென பஸ்ஸை கொண்டாந்து ஒட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ஒரே ஒரு பேருந்துதான் என்பதால் அங்கிருந்த பள்ளிக்கூட வாசல்தான் அந்த ஊரின் பேருந்து நிறுத்தமாகியிருந்தது. மணி எட்டேகால் ஆகிவிட்டது பேருந்தை ஓட்டுநர் இன்னும் எடுக்கவில்லை. கருப்பாயிக்கு எரிச்சலாக இருந்தது. ஒரு நாளைக்கு கொஞ்சம் முன்னாடி பஸ்ஸை எடுத்தாத்தான் என்னவாம் என்று யோசித்தவள் பேருந்தினுள் பார்;த்தால் வழக்கமாக செல்பவர்களில் பாதிபேர்கூட வரல. பாவம் அதுகளும் வந்தபின்னாடி எடுக்கட்டும் என தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள். இருந்தாலும் பேருந்தை இன்னமும் எடுக்காத கோபம் மனதில் இருந்தது.
மணி எட்டறை ஆனதும் ஒட்டுநர் பேருந்தினுள் ஏறி அமர்ந்தவுடன் கருப்பாயி கேட்டாள் 'அண்ணாச்சி செத்த முன்னாடிதா பஸ்ஸை எடுத்தாத்தா என்னவாம் ? அதற்கு ஓட்டுநர் ' பஸ்ஸூ டைம் எட்டரைக்குத்தான் உனக்காக முன்னாடியெல்லாம் எடுக்க முடியாது' என்று கூறிவிட்டு நடத்துனரைப் பார்த்து ' முருகா போலாமா' என்றதற்கு நடத்துனர் ரைட் என்று சொல்வதற்கு முன் கருப்பாயி ரைட் ரைட் என குரல் கொடுக்க ஒட்டுநர் சிரித்துக்கொண்டே பேருந்தை நகர்த்தினார்;.
பேருந்து கிளம்பியவுடன் கருப்பாயி பேருந்து நின்ற இடத்தில் பாயை விரித்து தனது பையிலிருந்து மிட்டாய் போன்றவற்றை வரிசையாக அடுக்கி பள்ளி மாணவர்களுக்கான கடையை ஆரம்பித்தாள்.

எழுதியவர் : வீ.சக்திவேல் தே.கல்லுப்பட (12-Nov-13, 8:34 pm)
Tanglish : perunthu nirutham
பார்வை : 205

மேலே