இரண்டாம் அத்தியாயம்-27

காலை சூரியன் உதயமானான்,,,,

எங்கோ சென்றுவிட்டு பைக்-கில் வந்து கொண்டிருந்தான் மதன்

மருத்துவ மனை பார்கிங்கில் பைக்-கை நிறுத்தினான் நேரே சென்று லிப்ட் பட்டனை அழுத்தினான் அது தனது சில்வர் நிற வாயை திறந்து மதனை உள்வாங்கியது ,,,, 3-ம் எண்ணை அழுத்தினான்

லிப்ட் ஒரு ரீங்காரத்தோடு மேலெழுந்தது,,,,,,

லிப்ட் 3-ம் மாடியை அடைந்ததும் தனது பயணத்தை நிறுத்தி , கதவுகளை திறந்து மதனை வெளியேற செய்தது

வராண்டாவில் நடந்து, 327-ம் எண் எங்கு என்று பார்த்து கொண்டே போனான்,,,, ஒரு அறை வாசல் கதவில் 327 என்ற எண் தங்க நிறத்தில் மினுமினுத்தது

கதவை தட்டினான்,,,,,, உள்ள வாங்க ,,, ஒரு குரல் வந்தது

கதவை திறந்து உள்ளே சென்றான்





அந்த அறையில் நிலா முத்து இருவரும் இருந்தனர்,

நிலா முத்துவிற்கு ஜூஸ் கொடுத்துக்கொண்டிருந்தாள் ,,,,,,,,,

"என்ன மதன் இவ்ளோ காலைல எங்க போயிட்டு வர"- முத்துவின் குரல்

கிட்ட தட்ட ஒரு வாரக்காலத்திற்கு பின் முத்துவின் குரலை கேட்கிறான் மதன்,,,,,,,,,,

ஆம்,,,, அந்த போராட்ட இரவின் அபாயத்தை தாண்டி,,,,,,,, பின் 2,3 நாட்களாக உணர்விழந்து இருந்த முத்து இப்போதுதான் பேசும் அளவிற்கு வந்திருக்கிறான்

"இல்ல சார் உங்க அவார்ட் விசயமாத்தான் போயிருந்தேன் உங்களுக்கு உடம்பு பரிபூர்ணமா குணமாக ஒரு மாசம் ஆகும்ன்னு டாக்டர் சொன்னாங்க,,, அந்த தகவல கொடுத்துட்டு ப்ரோக்ராம் ஒரு மாசம் தள்ளி வைக்க சொல்லி letter statement கொடுத்துட்டு வரேன் "- என்றான் மதன்


"சரி சாப்டியா மதன்"- என்றாள் நிலா

"இன்னும் இல்ல மேடம் "

"சாப்டு first "- என்று சொல்லி மதனுக்கு உணவளித்தாள்,,,

நிலா முத்துவிடம் மதன் பற்றி கேட்டு அறிந்திருந்தாள்,,,

ஒன்றும் பேசாமல் மதன் சாப்பிடுவதையே பார்த்து கொண்டிருந்தாள்



நிலாவின் பார்வையில் எதோ இருப்பது முத்துவிற்கு புரிந்தது

மதன் தனக்கு மற்றொரு கடமை இன்னும் மீதம் இருக்கிறது அதையும் முடிக்க வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கிறான் ,,,,,,,,,,,,,,,,,,,,,

எழுதியவர் : நிலா மகள் (13-Nov-13, 10:47 am)
பார்வை : 218

மேலே