காதலாகி கசிந்தது
விழியசைவில் என்னை ஆட்டுவித்தாய்! என்
வழியெல்லாம் நீபூட்டி வைத்தாய்! மொழி
ஒன்றைக் கேட்பதற்கே உன்பின்னே
என்னை நிழல் ஆக்கிவைத்தாய்!
வண்ணக் கனவுகளை சேர்த்து வைத்தேன்!
எண்ணங்களை அதனால் கட்டிவைத்தேன்! மண்ணுலகில்
சுவடுபதிக்கவே நெஞ்சில் உறுதி வைத்தேன்!
சுவர் வைத்தேன் காதலுக்கே!
தேன்சிந்தும் மொழியாள்! எந்தன் சிந்தனைத்
தேன் திண்ணும் விழியாள்! வானேந்தும்
வெண்மதியாள்! செந்தாமரை இதழாள்!
துண்டு துண்டாக்கினாள் கனவை!
வஞ்சி உன்னுருவம் உளிகொண்டு என்
நெஞ்சில் செதுக்கி வைத்தேன்! கஞ்சியிரங்க
லஞ்சமாய் காதலி என்றே கேட்டுவிட்டேன் !
பிஞ்சிபூ இல்லை நீபாறை!
முத்தமா? கேட்டேன்! மோகனப்பூவே என்பெயர்
சத்தமாய் சொல்லெனக் கேட்டேன்! யுத்தத்தின்
வாள்வீச்சு உன்பேச்சு உள்ளத்தில் உனைவிதைத்து
நாளாச்சு வெறுக்குது என்மூச்சு!
கனவுநதியில் நான் நனைந்து கிடக்கிறேன்!
நனவுவிதியில் விழுந்து தவிக்கிறேன்! எனது
கற்பனைக் கனவுகளை கட்டிவைக்கும் கயிர்
விற்பனைக் குண்டா கேட்கிறேன்!
இதயத்தில் உன்பெயர் எழுதிவிட்டேன்! சூரிய
உதயத்தில் பூமிபோல் மலர்ந்துவிட்டேன்! காதல்
மயக்கத்தில் தூக்கம் தொலைத்துவிட்டேன்! இனி
தயக்கமில்லை துணிந்து விட்டேன்!
சந்தன கன்னத்தில் பொங்கிவரும் சிரிப்பை
சிந்திவிடாமல் சிந்தையில் சேமிக்கிறேன்! விந்தையிது
விழிகள் சந்தித்த வேளையிலே எந்தன்
மொழிகள் மறந்து நிற்கிறேன்!!
கலைமான் கால்தடம் வெண்ணிலா முகத்தில்கண்டு
மலைத்தேன் காசக்குமெனெ மலைத்தேன்! சிலைதான்
சேலைகட்டி வந்ததென வியந்தேன்! உன்னெழிழுக்கு
விலைதான் உண்டா கேட்கிறேன்!
மயிலே உன் நளின நடைகண்டு
துயில் கொள்ள மறந்தேன்! தீயின்
இடைகண்டு விழுந்தேன்! மருந்துக்கான
விடை ஓடிவந்து எனைஅணை!
வஞ்சிக்கொடி நீபடரா விட்டால் இந்தபிஞ்சி
நெஞ்சு காய்ந்தே போகுமென கெஞ்சினேன்
மிஞ்சினாய் வஞ்சியில்லை வஞ்சகியென்றேன்!
தஞ்சம் உன்நெஞ்சம் என்றாய்!
வானவில்லுக்கு சக்களத்தி இவள் தானென்று
நாணமுற்று நின்றது வானம்! காணல்
மழைகூட கைவிட்ட காலத்தில் இந்த
ஏழைமகனோடு வாழ வருவாயோ!