காதல் சித்தியில் முடியும்
உன் அஞ்சல் கண்டு நான் அஞ்சல் ....
வீணையில் விழுந்த அங்குலியானேன் ....
அச்சன் கண்டுவிட்டார் உன் அஞ்சலை....
அஞ்சலை அஞ்சல் இல்லாமல் பறித்தார் ....
அக்கினி தாண்டவம் ஆடினார் அச்சன் ....
செய்வதறியாது அச்சுதனை மன்றாடினேன்.....
அச்சுதன் என் முழுமுதல் கடவுள் .....
அச்சுதன் என் கண்கண்ட காதலன் ......
நிச்சயம் என் காதல் சித்தியில் முடியும் ...!!!
அங்குலி -விரல் அச்சன் -தந்தை
நன்றியுடன் அகர தமிழன்