சச்சின் ஒரு சகாப்தம்

மும்பை கண்ட
முத்து - நீ
இந்தியாவின்
பொது சொத்து

உன் கனவு
அது
நூறு கோடி
இந்திய கனவு !

பள்ளி நீ
போகவில்லை
இன்று
பள்ளி உன்னை
படிப்பிக்கிறது

நீ
செய்வது உனக்கு
செயல்
எங்களக்கு சாதனை

நீ
மைதானத்தில்
எல்லை தாண்டிய
பயங்கரவாதி!

இந்தியாவில் மட்டுமே
இரண்டாம் விக்கெட்
விழுந்தால் ஆரவார காட்சி!

நீ
அடித்த ரன் மழையில்
நனைத்தே கிடக்கிறது
மைதானங்கள்

ஒரே பந்தை
ஒன்பது விதமாய்
உன்னால் மட்டுமே
அடிக்க இயலும்

பங்குசந்தை
இறக்கம் கொள்ளகிறது
நீ மைதானத்தில்
ஏற்றம் கொள்கையில்

நீ
இரக்கம் காட்டுவதில்லை
உன்னை
எதிர்த்து பந்து விசுபவரிடம்

உன் இதயத்துடிப்பு
அதிகரித்ததோ இல்லையோ
எங்கள் துடிப்பு அதிகரித்து
போகிறது நீ 90 தொடுகையில்

எங்களை
ஏசவும் உன்னையே
அழைகின்றனர்
நீ என்ன பெரிய சச்சினா ?

உன் உயரம் காட்டிலும்
உயரமாக உள்ளது
உன் சாதனைகள்

கிரிக்கெட் உலகின்
மதமாகி போனால்
நீ கடவுளாகி போவாய்

மைதானத்தில் நீ
வந்தால் போதும்
சரித்தரம்
சாதனை எழுதிக்கொள்ளும்

நீ விழ்ந்தாய்
என கொக்கரிபவரின்
வார்த்தை காயும் முன்
நீ
விஸ்வரூபம் எடுத்தாய் மலையாய்
மிதித்து தள்ளினாய்
அவர்களை மாடுவாய்

பாராட்டு மழையில்
நீ நனைத்தாலும்
அதன் ஈரத்தை
தலையில் இறக்கவில்லை
ஆதனால்
எம் நெஞ்சை விட்டும் இறங்கவில்லை

மைதான இருக்கையும்
பக்க திரையும்
இனி எப்போது
காண்போம்
என ஏக்கம் கொள்ளுது
அதற்க்கு
எப்படி தெரியும்
உன் சாயல்
தொட்டு விளையாடும்
தலைமுறை
இருக்கும்வரை - உன்
பயணம் தொடருமென்று !!!!!!!!

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது) (16-Nov-13, 11:31 am)
பார்வை : 113

சிறந்த கவிதைகள்

மேலே