மடமை----------
பெரு மழைக்காய் காத்திருந்த
மண் சுமந்த வித்தொன்று
மண்ணுடல் கீறி முளைத்தது- ஒரு
மழையின் கருணையால் !
மண்ணுள் கிளை பரப்பி
விண்ணில் வேர் விரித்து
கதிரவனை கை அமர்த்தி
கர்வமாய் சொன்னது-- -தான்
தானே முளைத்த மரம் என்று !