நான் - செத்த பிறகே உயிர் வாழ்கிறேன்

தமிழ் புத்தகத்தை உள்ளே வைத்து
என் சவப் பெட்டிக்கு ஆணி அடியுங்கள்...!

பூமிக்குள்ளும் புன்னகையோடு நான்
பூந்தோட்டம் அமைத்து உலவ வேண்டும்...!

செல்லரித்த என் எலும்புக்கூடும்
சீனித் துகளாய் எறும்பிற்கு இருக்கும்....!

செந்தமிழ் என் அருகில் இருந்தால் நான்
செத்தபிறகும் உயிர் வாழ்ந்திருக்கும்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Nov-13, 2:26 am)
பார்வை : 121

மேலே