ஞாயிறு

காலை வாசல் திறக்கும் முன்
காதலனாய் உன் முன்னால்
காலையிலே காத்திருந்தேன்
கதவைத் திறந்து வா பெண்ணே

உனக்கு முன்னே விழித்தேன்
உனைக்காண தவமிருந்தேன்
உள்ளத்துள் வேண்டினேன்
உணர்வு கொண்டு நீ எழுகவென்று

வெளியில் வா என்னைப் பார்
வெண்கதிர்களின் பிரகாசம்
மேனியெங்கும் பரவி விடும்
மேன்மைக்கு வழி வகுக்கும்

ஞாயிறு என நினைத்து
ஞானமின்றி தூங்குகிறாய்
ஞாயிறல்ல நானுனக்கு
ஞானம் தரும் வள்ளலே

.........சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (17-Nov-13, 11:06 am)
Tanglish : gnayiru
பார்வை : 116

மேலே