பாரதரத்னா
இந்தியாவின் தலை சிறந்த விருதான பாரதரத்னா விருதை ஒரு வேதியியலில் சிறந்த விஞ்ஞானிக்கு கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. C N R ராவ் அவர்கள் வேதியியல் கடலில் முத்து எடுத்த தங்கம். பல பிரிவுகளில் அன்னார் தனது ஆய்வு பணியை திறம்பட செய்துள்ளார். 1934 ஆம் ஆண்டு பிறந்தார். Scientific Advisory Council தலைவராக தற்பொழுது பணியாற்றுகிறார். 1500 ஆராய்சிக் கட்டுரைகளை தலை சிறந்த உலக அளவிலான ஆராய்ச்சி இதழ்களில் வெளிஇட்டுள்ளார். 40 க்கும் மேற்பட்ட அறிவியல் புத்தகங்களை வெளிஇட்டுள்ளார்.
அன்னாரின் சாதனைகளைப் பாராட்டி உலகின் பல்வேறு பல்கலைகழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்களை அளித்துள்ளன. அவைகள் Bordeaux, Caen, Colorado, Khartoum, Liverpool, Northwestern, Novosibirsk, Oxford, Purdue, Stellenbosch, Universite Joseph Fourier, Wales, Wroclaw, Notre Dame, Uppsala, Aligarh Muslim, Anna, AP, Banaras, Bengal Engineering, Bangalore, Burdwan, Bundelkhand, Delhi, Hyderabad, IGNOU, IIT-Bombay, Kharagpur,Delhi and Patna, JNTU, Kalyani, Karnataka, Kolkata, Kuvempu, Lucknow, Mangalore, Manipur, Mysore, Osmania, Punjab, Roorkee, Sikkim Manipal, SRM, Tumkur, Sri வெங்கடேஸ்வர, வித்யாசாகர்.
நானோ, திட வேதியியல் போன்றவை அன்னாரின் ஆராய்ச்சி பணியில் முதன்மை வாய்ந்தவை. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகளையும் பெற்று உள்ளார். பாரதரத்னா விருதுக்கு இதுவரை அவர் வாங்கிய விருதுகள் இறகுகளாக அமையும்.
அன்னாரின் வேதியியல் பணி இன்றும் திறம்பட தொடர்ந்து கொண்டு உள்ளது. ஒரு வேதியியல் மாணவராக அன்னாருக்கு விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.