உன் தோழனாக

சாப்பிட்டாயாவென நீ கேட்கும் போது,
எப்படி சொல்வேன்,
நான் காதல் பசியிலிருப்பதை,
கைகளை தோளில் போட்டு,
தோழியாக திரிகையில்,
அப்படியே தொலைந்திட தோணுதடி,
என் காதலை மறைத்து,
உன் தோழனாக !

எழுதியவர் : விஜயகுமார்.து (18-Nov-13, 12:52 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 328

மேலே