முதல் காதல்
பேசும் பூவே விழி வீசும் காதல்
எனை பார்த்து வீசி போனதேன்
கனவெல்லாம் உன் முகம் தான் பார்க்கிறேன்
அதிகாலை உன் குரல் தான் கேட்கிறேன்
உன் அருகில் நெருங்கினேன்
என் மொழிகள் மறக்கிறேன்
நீ தோள்கள் சாய்கையில் மூச்சிகாற்றினில்
வாழ்க்கை வசப்படுமே ...
கண் முன்னே காதல் தோன்றும் தருணங்கள் எப்போதென்று சொல் பெண்ணே .
இதோ கண்முன்னே ....
வானத்தில் தோன்றும் மின்னல் விழிகளில் வந்துசெல்ல என்முன்னே
இதோ என் கண்முன்னே ...
நம் கைகள் கோர்திடவே....
என் சாலை நீள்கிறதே ....
என் கவிதை தேடலும் ...கனவின் கூடலும் சேரும் ஓரிடம் நீ ..பெண்ணே !
ஒரு குடையில் நாமும் நனையும் நேரம்
குளிர் காற்றுகூட அனல் ஆவதேன் ...
புரியாத பார்வை ஒன்றை வீசினாய்..
அறியாத பாதை ஒன்றை காட்டினாய்
இவையாவும் போதுமே ...
இந்த வாழ்க்கை சொர்கமே ...
அந்த காலை சூரியன் மாலை சந்திரன் சேர்த்து கூறியதே..பெண்ணே !
கண் முன்னே காதல் தோன்றும் தருணங்கள் எப்போதென்று சொல் பெண்ணே .
இதோ கண்முன்னே ....
வானத்தில் தோன்றும் மின்னல் விழிகளில் வந்துசெல்ல என்முன்னே
இதோ என் கண்முன்னே ...
இதை காதலென்பதா .....இல்லை கானல் என்பதா !
இரு இதயதுடிபினில் காண்பது காதல் ...
கோவங்கள் கானல் ஆகிடும் பெண்ணே....