நட்பு சாளரம்
விளையாத வளைவுகளில்
நம் எண்ணங்கள்
சிலையாதல் எங்ஙனம்...!!!
வரைகின்ற கனவுகளுக்குள்
வண்ணங்கள் சாயம் போவதும்
முறையோ...!
ஏந்துகின்ற எதிர்பார்ப்புகளில்
உனக்குள்ளான தோல்விகளை
யான் ஆதரிப்பதும்
அங்கீகரிப்பதும்
நம் நட்புக்கான சங்கேதமே...!!
விடை பகர முனைகளில்
கேள்விக் கணைகளாலே
நீ எனை வீழ்த்துவதும்
யான் உனை சமாளிப்பதும்
ஒரு வகை புரிந்துணர்வே...!!!
உனக்கான விடுமுறையில்
யான் உனக்காய் குறிப்பெழுதுவதும்
சொல்லாத நட்புக்குள்
காட்டி விட்ட காரியமே..!
கழகம் முடிந்தும்
கைபேசி குறுந்தகவல்
மின்னஞ்சல் முகப்புத்தகம்
என்றோடு மணம்
வீசியது நம் நட்பு மலரே....!!!
என் மணப்பந்தலுக்கு
நாள் கோள் என்று
சம்பிரதாய சந்தனம் தூவி
நல்லவேளை
குறித்தவனும் நீயே..!!
காலங்களில் எனக்கோர்
கணவானை கரம் சேர்த்திட்டாய்..!!
காலத்தின் கட்டாயத்தில்
நீ சொல்லாத காலை வந்தனங்களில்
விடிந்தன பொழுதுகள்....!!!!
பகிராத பந்தலுக்குள்
மலர்ந்தது நட்பு மல்லிகை..!!
சேதி சொல்லாமலே
வெளிநாடு சென்றாய்..!1
தகவல் தேடி
களைத்து போனேன்..!!
காலம் வருமென
காத்திருக்கிறேன்..!!
யோசித்து விசாரித்து
காரணம் க்ண்டு கொன்டேன்..!!
நட்புக்கு நீ எனக்கிட்ட
மணக்கோலமே விரிசலிட்டதை..!
கசக்கிறது நினைவுகள்..!
இருந்தும் என்றும் போல்
இன்றும்
யான் நட்புக்குள்ளே
சந்நிதானமாகிறேன்..!!
என்றேனும் வந்து போ
எனக்காக அல்ல
என் நண்பனை விசாரிக்கும்
நம் நட்புக்காக...!!!