நகம் நல்லது தான்

அவள்.,

ஓர் சிறந்த அழகி - அதனால் தான்
தரப்பட்டது அவளின் விரலுக்கும் ஓர் கிரீடம்..!

அவளின்.,

இரட்டைக்கூர்வாள் (கண்கள்) உறங்கிடும்
வேளையில் அவள் நகமும் ஆயுதமாகும்....!

இவளால்.,

இறந்த செல்களும் இன்னுமொரு பிறவியாய்
இவள் விரல் தொடும் நகமாயின....!

இவளுடன்.,

எப்போதும் இவ்வாயுதம் உடனிருக்கும்
எத்தகைய கருவிகளும் கண்டுபிடிக்காதபடி..!

இவளின் தன்மை பற்றி.,

அறியாதோருக்கு இது ஓர் அரிய தகவல்
புரிந்து நடக்க வேண்டுகிறேன்...!

எழுதியவர் : jenni (21-Nov-13, 2:38 pm)
Tanglish : nagam
பார்வை : 114

மேலே