ஒரு குயிலின் குரல்—தன்னிலைத் தேறல்

அன்னதன் வேலை அவரவர் செய்யின்
எண்ணுவரோ அயலர் பிழைப்பு!

தன்னிற் குறைகள் தேறா தெவரும்
மண்ணிற் புகழா வதில்

முன்னிற் பிழைகள் முகர்ந்திடு முன்னமே
உன்னிற் தொலைவது மேல்.

கண்ணுழல் தூணும் கடுப்பு மரத்துமே
முன்னவர் தூசெவன் பாடு.

எண்ணிற் தவறது ஏற்பது ஏற்றுதும்
பின்னிற் திருத்துப் பிழை.

கண்ணிற் தெரிவதும் காட்சிப் பிழைகளே
எண்ணில் விளையும் நிலை.

தன்னிற் தெளிந்துமேத் தேறிய பின்னரே
முன்னிற் பிழையும் உரை.

உன்னுள்தா னூறும் உலைவஞ்சமுந்தீரவே
முன்னுளது தேறல் விடல்.

தண்மையிற் பேணுந் தனமையே நன்மையாம்
உண்மை யதுவதேக் காண்.

அன்பிற்காக என்பதும் காய்தல் அறமதே
பண்பும் அதுவே பழகு!.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (22-Nov-13, 12:10 pm)
பார்வை : 98

மேலே