பாவையின் பார்வை

பாவையின் பார்வை..,


கூர்மையில்.,
கூர் வாளும் தோற்றுபோகும்., அவளிடம்

அழகில்.,
அகவும் மயிலும் அமைதியாகும்., அவளிடம்

கவிதையில்.,
கவிஞனும் கற்றுக்கொள்வான்.., அவளிடம்

அலைப்பாய்வதில்.,
ஆழியும் ஓர் மாணவன் தான்.., அவளிடம்

படபடப்பதில்.,
பட்டாம்பூச்சியும் குழந்தை தான்.,அவளிடம்

பேசுவதில்.,
பாஷைகளும் பதுங்கி போகும்.., அவளிடம்

ஒய்யார அசைவினில்..,
உதடுகளும் ஊமையாகிப்போம்.., அவளிடம்


அவளின் விழியின் வார்த்தைகள்..,
சில நேரம் எழுதப்படாத வெள்ளைக்காகிதம்..!
சில நேரம் பற்றவைத்த தீயாய்..!
சில நேரம் திமிரான பிள்ளையாய்..!
சில நேரம் ஒட்டிபிறந்த இரட்டைகளாய்..!
சில நேரம் தனிமையாய்..!
சில நேரம் காதலுக்காய்..!
சில நேரம் சீறலுக்காய்..!
சில நேரம் சில்லு சில்லாய் சிலரில் ..!


சில நேரம்
சிலர் கண்களில்
சில கோணங்களில்...!
பேசலாம் நாமும் (நம்) கண்ணால்..!

எழுதியவர் : ஜென்னி (22-Nov-13, 1:06 pm)
Tanglish : PAAVAIYIN parvai
பார்வை : 1275

மேலே