என்னுயிர் நண்பனே

உள்ளத்தின் அருவிகளிலே
வண்ணங்கள் ஊற்றெடுக்க
இந்த நொடியில்
உன் நட்பும் காரணம்!!

முகம் பார்த்ததில்லை
எனினும்
இனியதோர் அகம் கண்டேன்!
அன்பின் முகவரி என்றேன்!

ஒன்றி போகும் எண்ணங்களால்
உன்னில் என் தேடலை
நிறைவாய் உணர்ந்தேன்!
நித்தமும் மகிழ்ந்தேன்!

ஆணென்ன பெண்ணென்ன
உள்ளம் ஒன்றென்றது
நம் சங்கமங்கள்!
நட்பின் ஆகமங்கள்!

ஜென்மம் ஒன்று வேண்டாம்
நொடி பொழுதே போதும்
பரவசத்தில் ஆழ்த்த!
நட்பில் ஈர்க்க!

சிறு பிள்ளையின் வெகுளித்தனம்
உன் கபடில்லா மனம்!
அதன் அறைகளுள் நான் கண்டது
ஆறாத ரணம்!

சாதிக்க நினைக்கும் இளைஞனே!
சேவை செய்திட துடிக்கும் நண்பனே!
தடைகளுக்குள் சிக்கி திணறும்
ஆட்டுகுட்டி நீ!

சிறகு விரித்து பறந்து வா
நெருப்பில் இருந்து எழுந்து வா
முடிவு இல்லாத பீனிக்ஸ் பறவையாய்!
சிகரம் எட்டும் காட்டு குதிரையாய்!

அனல்கொதிக்கும் படைப்புகள் வார்த்திடும்
அழகான உன் இதயத்தின்
வலிகள் கூறிடும்
உண்மைகள் ஆயிரம்!

ஒன்றும் இல்லை என்னிடம்
நட்புக்கு பரிசளிக்க
என் அன்பை தவிர!
உன் உள்ளம் குளிர!

நன்றிகள் ஆயிரம்
சொல்லிட வேண்டும்!
அன்பிற்கு பிறப்பளித்த தமிழுக்கும்
எழுத்துக்கு வழிவகுத்த இணையத்திற்கும்!

நீங்காது நிற்கும் உயிர் போல்..
கொடியோடு இணைந்த தளிர் போல்..
நேசம் தொடர்ந்திட வேண்டும்!
நெஞ்சங்கள் இணைந்திட வேண்டும்!

எழுதியவர் : மது (22-Nov-13, 1:55 pm)
Tanglish : ennuyir nanbane
பார்வை : 804

மேலே