தமிழே வணங்குகிறேன் உன்னை

பாலும் கசக்கவில்லை
பிழிந்த துணியும் கசக்கவில்லை
என்று நயம்பட சொன்ன புலவனே
இன்று பேசும் தமிழைக் கேட்டால்
என்ன சொல்வாயோ ?

பெற்றுக் கொள்ள வேண்டியது என்றனை
பெற்று கொல்ல வேண்டியது என்று எழுத
பொருள் திரிந்து விட படித்தவன்
அசந்து நின்றான் சற்று நேரம்
என்ன செய்வது என்று புரியாமல்.

அதே வரிசையில் மற்றொரு கடிதம்
கஸ்தூரி என்னிடம் கேட்டு போனாள் என்பதை
கஸ்தூரி என்னிடம் கெட்டு போனாள் என்று வரிக்க
திகிலடைந்தான் அதை வாசித்தவன்
மிரண்டு போனான் கண நேரத்தில்.

தமிழ் சிறந்த மொழி என்றென்றும் இளமையாகத் திகழ
வேறுபாடுகள் கூர்மையானவை வியப்புடன் நோக்க
ஒரே எழுத்துக்கு பல விகிதங்கள் இருக்க
நெடிலும், குறிலும், லகரமும், னகரமும் கூடி விரைய
சற்று மாறினாலும் பொருள் அதிர்ச்சியாக திரிந்து ஒலிக்க


தமிழின் அழகை எடுத்துரைக்க வார்த்தைகள் என்னிடம் ள் இல்லை
அதன் ஆழத்தை வெளிப்படுத்த சொற்றொடர்கள் இல்லை
அதனுடைய காந்தத்தை அளக்க சக்தி இல்லை
அதன் வீச்சை அறிய வாய்ப்பு இல்லை
தமிழே உன்னை கை கூப்பி வணங்கு கிறேன் வியப்போடு

எழுதியவர் : மீனா சோமசுந்தரம். (25-Nov-13, 3:52 pm)
பார்வை : 338

மேலே