இயன்ற அளவு உதவி

எவ்வளவுதான்
ஞானியாய் இருந்தாலும்
தவறு வருவது இயற்கை ....

தவறை மறைப்பவன்
மனிதன் அல்ல - அதை
திருத்தி கொள்பவனே மாமனிதன் ....

உதவி தேவை
தவறை மாற்ற என்றால்
தயங்காமல் கேளுங்கள் ....

என்னால் இயன்ற வரைக்கும்
செய்வேன் இந்த உதவியை ,,,,

ஏன் என்றால் ...

நான் தமிழை நேசிப்பவள் அல்ல ...
அதை சுவாசிப்பவள் ....

எழுதியவர் : Beni (26-Nov-13, 10:32 pm)
பார்வை : 552

மேலே