பயிற்சிவேணுமோ

திருடன் : அப்பாடி !!!!!
நல்லபடியா வீட்டுல இருக்குற ஏல்லா பொருளையும் மூட்ட கட்டியாச்சு ....எப்படி எடுத்துட்டு போறது ...
தொலைபேசி இருக்கே ஏதாவது " வாடகை வண்டிய வரவழச்சு எடுத்துட்டு போக வேண்டியதுதான் ...

சிறிது நேரம் கழித்து வண்டியும் வந்தது பொருட்களும் ஏற்றப்பட்டன ...

வண்டிக்காரன் : சார் எல்லாம் ஏற்றியாகி விட்டது போகலாமா?

திருடன் : சரிப்பா , நான் கொஞ்சம் களைப்பா இருக்கே அதனால் வீடு வந்ததும் என்னை எழுப்பிவிடுகிறாயா ?

வண்டிக்காரன் : கண்டிப்பா சார் ..

திருடன் கண் விழித்து பார்த்ததும் ஆச்சர்யம் அவன் இருந்தது ஜெயில் அறையில் ...

விறு விறுவென்று எழுந்து அறையின் வெளியில் இருக்கும் காவலாளியிடம் கேட்டான்

திருடன் : சார் நான் எப்படி இங்க வந்தேன் ...

காவலாளி : பெருமூச்சுடன் திருடனை பார்த்து முறைத்துவிட்டு திரும்பிவிட

திருடன் : நான் எப்படி இங்க வந்தேன் தயவு செய்து சொல்லுங்க சார் .

காவலாளி : டேய்
காவலாளி வீட்டுல திருடின சரி ...
ஆனா அவருடைய தொலைபேசிய பயன்படுத்தி எதுக்கு வண்டிய வரச்சொன்ன?

திருடன் : என்ன சார் அந்த தொலைபேசியில் இருந்து நான் தான் பேசுகிறேன் என்று காவல் துறைக்கு எப்படி தெரியும் ..

காவலாளி : டேய்..... நீ தொலைபேசின்னு நினைச்சிகிட்டு பேசுனது காவல் துறை பயன்படுத்தும் " walkie talkie " அதுல உன் கூட பேசுனது
" Customer care " இல்ல டா ...
" Police control room "

திருடன் : அட அதனால தான் ஓவர் ஓவர் ன்னு கேட்டுச்....சோ.....!!!!!!!!!!
...

எழுதியவர் : சாமுவேல் (27-Nov-13, 7:29 pm)
பார்வை : 144

மேலே