நோய்

வருமுன் காப்பர் -எனக்கு

வந்தபின்னரும் காக்கமுடியவில்லை !!

இந்தக் கொடிய நோயால்

மரணம் என்றோ ஒரு நாள் வரும்.

எப்போது வரும் என்றுதான் தெரியாது ??

எனக்கு மட்டும் விதிவிலக்காக

என் மரணம் எப்போது ...

ஒரு கடதாசியில் குறிக்கப்பட்டுள்ளது.

இருக்கும் போதே ஏதாவது செய்திட வேண்டும்

எதுவுமே செய்ய முடியவில்லை.

இறந்தபின்பாவது ஏதாவது செய்ய முடியுமா என்றால்

அதற்கும் முடியாதாம் .....

நோய் குடியிருக்கும் உடம்பல்லவா ??

நான் வாங்கி வந்த வரம் அப்படி

என்னை நோய் மட்டுமா கொல்கிறது...

இல்லை இல்லை -சில

மனித மனங்களும் தான் கொல்கிறது!!

மனித மனங்களும் தான் கொல்கிறது!!

எழுதியவர் : (27-Nov-13, 8:01 pm)
சேர்த்தது : Sugi Viththiya
Tanglish : noy
பார்வை : 69

மேலே