உயிருக்கு அகரம் ஆகாரம்
உயிரின் உயிரோட்டம் உணவு
உணவின்றி உடல் இயந்திரம்
காரியமாற்றாது
திரைகடல் ஓடிய திரவியம்
வயிற்றுப்பசிக்காகவே....
ஒருவேளை உணவுக்காக
உயிர் படும் அல்லல்கள்
எத்தனை...???
வயிற்றுப்பசியால் சாவை ருசித்த
கதைகள் மௌனம் கலைக்குமா...???
சமாதான நோபல் பரிசினை
தட்டிச்சென்ற ஜரோப்பிய யூனியனிலும்
ஆயுதங்களால் மோதிக்கொண்ட நாடுகள்
ஆகாரத்திற்கு ஆதாரமின்றி தவிக்கின்றன....!
தாய்ப்பாலுக்காய் தடவிய
முலைகளில்
வெறுமையை உணர்ந்த
சோமாலியாவின் மழலை
சோகங்கள் எத்தனை...??
சமூக பிரச்சனைகளுக்கு
முதலாய் சமளமிடுவதும்
வயிற்றுபசியே...!
உண்டிச்சுருக்குதலும்
உணவின் மகிமை சொல்லி
ஏழையின் வாய்ப்பாட்டினை
வரையறுக்கின்றன!
உழவன் கால்
சேற்றிலே முத்தமிட்டால்தான்
நாம் சோற்றோடு
கை குலுக்கிட முடியும்!
எனவே உணவின் வீண்விரயத்தை
தடுப்போம்
ஒருவேளை உணவை
ஓருயிர்க்கு அளித்து
தானங்களில் சிறந்ததானம்
அன்னதானம் என்பதை
அறநெறியாக்குவோம்…..!!