நகர் வலம் -1

{கற்பனை கதை }

ஒரு நாள் இரவு,

உயிர் பெற்றது "பாரதியாரின் சிலை",,,,,


தனக்கு இடப்பட்ட கல் மேடையிலிருந்து இறங்கி வந்தார்

"என் தாய் திரு நாடே,,,,,,, உன்னை யாம் போற்றுகிறோம்"

தான் வாழ்ந்த தமிழ் நாடு இப்போது எப்படி உள்ளது என்றொரு கேள்வி வந்தது அவருக்குள், சரி அப்படியே நகரை வலம் வரலாம் என்றெண்ணி தன் நகர் வலத்தை ஆரம்பித்தார்

முதலில் அவர் கண்டது, ஒரு "குடிமகனை",,, நன்றாக குடித்துவிட்டு தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தான் அந்த இளைஞன்,,, அவனை கண்ட பாரதி அவனிடம் பேச ஆரம்பித்தார்

"இளைஞனே நில் "

"யாருபா அது என்ன நிக்க சொன்னது"

"நான் தான் பாரதி"

"யாருதி யா??"

"இல்லையப்பா நான் பாரதி,,, செந்தமிழ் புலமையில் பல கவிகளை படைத்தவன் நான்"- பெருமிதத்தோடு சொன்னார் மகாகவி பாரதியார்,,

"ஒ அப்டியா,,, சரி இப்ப என்ன வோவும் உனக்கு"

"நான் வாழ்ந்த என் தமிழ்நாட்டை காணவே வந்துள்ளேன்"

"சரி வா நா கூட்டினு போறேன்"

இருவரும் நடக்க ஆரம்பித்தனர்

மகாகவி மனதிற்குள் நினைத்தார்,,,,,, இவன் பேசும் மொழி தமிழ் போல இருக்கின்றதே,,, ஆர்வமிகுதியால் அவனிடம் கேட்டே விட்டார்

"இளைஞனே நீ பேசுவது என்ன மொழி??"

"என்னாது என்ன மொழியியா,,, தமில் யா தமில்"

"அது தமிழப்பா,,,,,,,,, மொழியின் பெயரையே தவறாக கூறுகிறாயே "

"அது சரி இங்க இத விட கலிஜா பேசுறதுக்கெல்லாம் ஆள் இருக்குப்பா"

"அது இருக்கட்டும் நீ மது அருந்தி இருக்கிறாயா ?" என்றார் பாரதி

"மதுவா அந்த பொண்ணு தூங்கினு இருக்கும்பா,, அத என்னத்துக்கு கேக்குற"

"அட பெண் இல்லையப்பா குடிக்கும் மது"

"ஓ நீ சரக்க அடிச்சிருக்கியானு கேக்குறியா அத தமில்ல கேக்கவேண்டிதானப்பா,,,,,,, ஆமா குடிச்சினுக்குறேன்"

"மது உடல் நலனை கெடுத்துவிடும்மப்பா"

"அதெல்லாம் கெடுக்காது கெடுக்காது குடிக்கிறவனுக்கு தான்ம்பா தெரியும் அதோட அரும சும்மா பேசிகினு இப்போ தியேட்டர் போனாலும் இதே பொலம்பல் தான் அங்க படம் போடும் முன்னால ஒருத்தன் வராம்பா முகேஷ்ன்னு அவன் பூட்டானாம் அதனால நான் குடிக்க கூடாதாம்,,,,,, நான் அவன் செத்ததுக்கு செத்து 2 ரவுண்டு அடிச்சிட்டேன்,, தெரிஞ்சிக்கோ"- என்றான் அந்த குடிமகன்

"சரி சரி கோபம் கொள்ளாதே இளைஞனே,,, எனக்கு இந்த ஊரை சுற்றி காட்டு"- என்றார் பாரதி

"ஓகே பா "- என்று அவனும் நடக்க ஆரம்பித்தான்


(நாமும் வலம் வருவோம்,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (29-Nov-13, 6:41 pm)
பார்வை : 157

மேலே