கனவாய் போன காதல்

கனவுக்காதலியே!



கண்டுகொண்டேனடி

கண்ணில் உனைக் கண்டவுடன்

கற்பனையில் நிலைத்தவள் நீதானென்று...

நின் உறவை நிதர்சனத்தில் நிர்மாணிக்க

நித்தமும் அலைந்தேனடிப் பித்துப் பிடித்து

கண்டுகொள்ளாமல் கலைத்தாயடியென்

கனவுக் காதலை ...

காற்று பட்ட கார்முகிலாய் கலைந்து போனதடி

என் காதல்..

காயத்தில் கதறி கதறிக் கல்லாய் போனதடி

என்னிதயம்..

எழுதியவர் : vickyjegan (30-Nov-13, 1:11 am)
சேர்த்தது : vickyjegan
பார்வை : 96

மேலே