நகர் வலம்-2

பாரதியும் அந்த குடிமகனும் தங்களின் நகர் வலத்தை ஆரம்பித்தனர்

இருவர் கண்ணிலும் முதலில் தென்பட்டவர்கள்,,,,,,, சாலை ஓரங்களில் வாழும் மக்கள்

அவர்களை கண்ட பாரதி அந்த குடிமகனிடம் வினவினார்

"இளைஞனே யார் இவர்கள்"?

"இவிங்களா அதா தெரியுது பாரு அந்த கட்டடத்துல வேல செயிரவங்க"

"எதற்காக வீதிகளில் உறங்குகிறார்கள்?"

"அட அங்க வேல செயிரவங்களுக்கு ஒரு நாளைக்கு 100 ரூபா தான்பா குடுப்பாங்க அத வச்சிகினு இன்னா 5 ஸ்டார் ஹோட்டல்லையா தங்க முடியும்"

"அது சரி இவர்களின் பூர்விகம் எது ?"

"இவிங்கலாம் கிராமத்துலேந்து பொழப்பு தேடி பட்டணத்துக்கு வந்தவங்கப்பா,,,,"

"ஏன் அவ்வாறு வந்தார்கள்?,,, அங்கேயே விவசாயம் செய்யலாமே?? "

"விவசாயமா அட போப்பா நிலம் எல்லாம் எங்க இருக்கு விவசாயம் பண்ண"- அலுப்பாக சொல்லி கொண்டான்

"ஏன் என்னவாயிற்று???"

"நிலம் எல்லாம் வீட போச்சு,,, பத்தாததுக்கு சுனாமி வந்து உப்பு நிலமா போச்சு,,,,,, அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டு பூச்சி கொல்லியும், ரசாயன உரமும் போட்டு போட்டு இந்த நிலத்தையே நாசமாகிட்டானுங்க,,,,,,

மனுஷ பயலுகளோட பேராசைக்கு இயற்க்க பலியாயிடுச்சுப்பா,,,

கொஞ்சம் நஞ்சம் விவசாயம் செயிரவங்களையும் இப்ப யாரு செயிய விடுறா

சும்மாவா சொன்னங்க "உழுதவன் கணக்கு பாத்தா உழக்கு கூட மிஞ்சாதுன்னு"

அதன்பா இப்ப நடக்குது ,,,,,,,, இன்னும் கொஞ்சநாள் போன விவசாயம்னு ஒன்னும் இருக்காது

விளைச்சலுக்கு ஏத்த காசு கெடச்சாதானப்பா அவிங்களும் பொழைக்க முடியும்

இன்னும் கொஞ்ச நாள் போனா எல்லாம் இன்னாதான் திம்பானுங்கன்னு நானும் பாக்குறேன்"- என்றான் அந்த குடி மகன்

பாரதி சிந்தனையில் ஆழ்ந்தார்,,,,,,,,, "உழவு இல்லாமல் வாழ்வா??? எப்படி முடியும்???"
ஒரு உழவனின் நிலை இப்படியா??"

காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்


பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.


தன் வரிகளை தானே நினைவு படுத்தி கொண்டார் மகாகவி பாரதியார்

எழுதியவர் : நிலா மகள் (30-Nov-13, 10:57 am)
பார்வை : 119

மேலே