நகர் வலம்-3

அந்த மக்களை கண்ட பின் மீண்டும் தன் நகர் வலத்தை தொடர்ந்தார் பாரதி,,,,,, கூடவே அந்த குடிமகனும்,,,,

இரண்டாவதாக அவர்களின் கண்ணில் பட்டாள் ஒரு இளம் வயது பெண்

இன்றைய நாகரீக மங்கை,,,,,,,,,

முகத்தில் முக பூச்சு,,,,,,, கையிலே அலைபேசி,,,,,,, மேலை நாட்டு உடை,,,,,, கொஞ்சிடும் நடை

பாரதிக்கு ஆச்சர்யம் "பெண்கள் இவ்வளவு சுதந்திரமானவர்களாகிவிட்டர்களா!!!!!!!!!"- மனதில் மிகவும் மகிழ்ந்தார்,,,, ஆனால்,,,,,,,,,

அந்த குடி மகனிடம் கேட்டார்,"இளைஞனே யாரிவள் இப்படி ஒரு உடைஅணிந்து இந்த இரவில் இங்கென்ன செய்கிறாள்?"

"அத ஏன்பா நீ கேக்குற,,,,,,, இங்க நெறைய அப்படி தான் இருக்கு,,,,, அத பத்திலாம் கேக்கதப்பா,,,, நல்ல காலம் எனக்கு பொம்பளபுள்ள இல்ல"

"ஏன் இப்படி சளைத்துக்கொள்கிறாய்??? ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் தானே,,,,,,,, உன்னை சுமந்த வயிற்றில் தானே அவளையும் சுமக்கிறாள் உன் தாய் ,,, அப்படி இருக்க நீ அவளுக்கு சமபங்கு கொடுக்கத்தானே வேண்டும்"- என்றார் பாரதி


"எதுல குடிக்கிறதுலையா?"-அலட்சியமாகவே கேட்டான்

"என்ன???????? பெண்கள் மது குடிக்கிறார்களா??"- அதிர்ந்தார் பாரதி

"அட ஆமாப்பா,,,,,,,, சில பொண்ணுங்க அப்டி தான் இருக்கு இப்பாலம் எது நல்ல பொண்ணுனே தெரில்ல,,,,,,,,,,,

எதுக்குமே அளவு இருக்குப்பா,,,,,,,,,, எதோ பசங்கள மாதிரி படிக்குறாங்களா ஓகே,,,,,, ஆம்பளைங்க மாதிரி சாதிக்கிறாங்களா,,,,,,,,, ரொம்ப சந்தோசம்

வாழ்க்கைல போராடி முன்னுக்கு வராங்களா,,, வாழ்த்துக்கள்

ஆனா சில பேர் சரிசமானம்ன்னு சொல்லிடு குடிக்கிறாங்கப்பா,,,,,,,, அதன் தாங்கிக்க முடில

அவிங்களெல்லாம் கெடுக்குரது எது தெரிமா??"


"எது??"

"வா காட்டுறேன் வா"

பாரதியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றான் அவன்


"அத பாரு அவிங்கதான்"

அவன் காட்டிய திசையில் இருந்தது ஒரு பப்,,,, அங்கே குடித்துவிட்டு தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தார்கள் சில நவநாகரிக மங்கையர்கள்


"புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!"

தன் பாடல் வரிகளை தானே நினைவு படுத்தி கொண்டார் பாரதி


(நாமும் வலம் வருவோம்,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (30-Nov-13, 11:25 am)
பார்வை : 125

மேலே