இயற்கை அன்னையின் மூத்த மகள் அவள் நிலா பெண்ணே 555

நிலாபெண்ணே...

உன் சகோதரன் பகலில்
வெப்பமாக வருகிறான்...

நீயோ இரவில்
குளிர்ச்சியாக வருகிறாய்...

பூமியில் உள்ள
உன் தங்கைகளை...

பகலில் காணும்
அழகை விட...

உன் குளிர்ந்த
வெளிச்சத்தில்...

நீ தரும் உன் அழகை போல
உன் தங்கைகளும்...

பூமியில் அழகாக...

மாதத்தில் ஒருமுறை
உன் முகத்தினை...

முழுமையாக
காட்டுகிறாய்...

பூமி எங்கும் வெளிச்சமாக
உன் முகத்தால்...

மாதத்தில் ஒருமுறை
உன்னை மறைத்து கொள்கிறாய்...

பூமியெங்கும்
இருளாய்...

ஆயிரமாயிரம்
விளக்குகள் ஏற்றியும்...

உன் இருளை மிஞ்ச
முடியாமல் மானிடர்கள் நாங்கள்...

உன் கூடவே
வருகிறது உல்லாசம்...

பனித்துளிகள் புல்லின்
மீது உறங்குவதையும்...

மலரின் மீது காதல்
கொள்வதையும் காண...

அடடா என்ன அழகு
எத்தனை அழகு...

உன் சகோதரனை
கண்டால் மறைகிறது...

பனி துளிகள்...

பூமியில் உன் தங்கைகளின்
உள்ளங்கள் மென்மை...

விண்ணில் நீ இருந்தாலும்
உன் உள்ளமும் மென்மைதான்...

பூமியில் காணும்
பாவை எல்லாம்...

உன் தங்கை போலவே...

கானகத்திலும் நடை போடலாம்
உன் துணை கொண்டு...

இரவு நேரங்களில்...

தினமும் நீ
இரவில் வந்து...

பகலில் மறையும்
காரணமென்ன...

உனக்கு கட்டளைகள்
இடுவது யார் தினம் தினம்...

உன்னை கண்டு...

உனக்காக நித்தம்
நூறு கவிதைகள்...

நூறு கவிஞர்கள்
உன்னை பாடவே தினம்...

தினம் உதித்து கொண்டே
நீ மட்டும் எப்படி...

கரையமலே கம்பீரமாய்
உலா வருகிறாய்...

எங்களின் மனங்களை
கொள்ளை கொண்டு...

ஒரு மானிடன் உயிர் வாழும்
வரை பூமியில் நிற்பாய்...

உலாவந்தபடி நீயும்
கரையபோவதில்லை...

உனக்கு
முடிவும் இல்லை...

நித்தம் நூறு கவிஞர்கள்...

உன்னை பாடி கொண்டே...

உன்னை வர்ணிக்க எனக்கு
வார்த்தைகள் இல்லை...

தினம் உனக்காக
பாடுவதில் நூறு பேர்...

நீ உல்லாசமாய் உலா வர
எல்லையில்லா நீல வானம்...

உன்னை எப்போதும்
சூய்ந்து கொள்ள...

விண்மீன் கூட்டம்
விண்ணில்...

நிலா பெண்ணே உலா
வருகிறாய் மண்ணில்...

உன்னை
பாட நாங்கள்...

உன்னை காண்கிறோம்
தினம் தினம்...

இயற்கை அன்னையின்
மூத்த மகளே...

முழுமதி எழில் மதியே...

என்றும் நீ உல்லாசமாய்
உலா வர வேண்டும்...

பூலோகம் இல்லாமல்
போகும் வரை...

நிலா பெண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Nov-13, 4:30 pm)
பார்வை : 113

மேலே