முலமும் மந்திரமும்

ஆனந்தக் கூத் தாடினான் தில்லையில் நடராஜன்
கால் மாற்றி மாறி ஆடினான் வேகமாக சிற்சபையிலே
காலைத் தூக்கி தூக்கி ஆடினான் கூத்தன் அம்பலத்திலே


அண்டம் அதிர கால் சலங்கைகள் குலுங்க ஆடினான்
கங்கை துளி சிதற அடியார்கள் எல்லாம் கொண்டாட
ஆடினான் தாண்டவம் வெகு நாகரிமாக வெள்ளி அம்பலத்திலே

காணக் கண் கோடி வேண்டும் திரு நடனத்தைக் களி ப்புடன் நோக்க
பரவசமாக கரைந்த்துருகி நெகிழ்ந்தது கணகள் துடிக்க
கண்ட காட்சியை என் சொல்லி விளக்குவேனோ .

மெய் மறந்தேன் நிலை இழந்தேன் பரமா னந்தத்தைக் கண்ட பிறகு
பரததிற்கே ஓர் இலக்கணம் வகுத்த பரமனை தாழ் பணிந்து
முலமும் மந்திரமும் கண்ட மூக்கண்ணணை சிறைப்பிடித்தேன் .

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (30-Nov-13, 4:36 pm)
பார்வை : 122

மேலே