என் மனம் உன்னிடம்

நிலாவின் வெளிச்சத்தில்
வளர் ,தேய் பிறைகளோ
இருள் சூழ்ந்த வானமும்
காற்றும் என்னை வந்தே
என் இதயத்தை தாக்கவே
என்னில் உந்தன் நினைவுகள்

என் இதயத்தில் தீயாய் மோதுதே
தென்றலின் துணையும் இல்லை
உந்தன் துணையும் இல்லை ஏனோ
வெறுக்கின்ற எந்தன் காலங்களில்
நெருங்கிய உந்தன் காதல் நினைவோ
தூங்கிற பல நேரத்தில் விழி தூங்காத
என் விழிகள் விழித்திட்டே இருக்கவே

நட்சத்திரங்கள் என்னை பார்த்தே சிரிக்க
நானோ எப்படித் தான் சிரிக்க மறந்தேன்
மனதில் வடுக்களோ துன்பம் என்னை கொல்ல
பொய்யான கதைகள் கட்டி விட பலரோ
கறைகள் படியாத உள்ளங்களில் கறை கறை
தூங்கிற நேரங்களில் இங்கு உனக்கென்ன வேலை
நல்ல மனங்களை கொன்று நீயெல்லாம் வாழ்வதா

காதலே யார் மனம் யாரிடமோ என் மனமோ(உன்னிடம்)
உந்தன் மெளனங்களை கொன்று விட்டு வாராயோ
உள்ளம் திறந்து பேசி விடு பொய்கள் இல்லை
உண்மைகளை புரிந்து விடு என்னிடம் வந்து விடு
இரவும் பகலும் ,நானும் நீயும் ,காதலும் கண்ணீரும்
என்றென்றும் உந்தன் நினைவிலே எந்தன் தனிமை
தனித் தனியே நாம் இருவரும் போகும் இடம் எங்கே

நாம் சேரும் நேரம் தேய் பிறைக்கு இங்கென்ன வேலை
வளர் பிறையில் எம் காதல் தேய்பிறையே நீயும் தேயாதே
என் விதியா இல்லை உன் விதியா காலத்தின் சோதனையா
கண்ணீர் குளத்தில் மூழ்குகிறேன்... கை கொடுத்து உதவிடாயோ
என்னில் பாசம் இல்லையோ.புரியாமல் நானும் நீயும் இருப்பதா
புரிதல்கள் இல்லையோ புரிந்து கொண்டு என்னிடம் வந்து விடு

எழுதியவர் : (2-Dec-13, 3:43 am)
Tanglish : en manam unnidam
பார்வை : 192

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே