நகர் வலம்-4

தான் பாடிய புதுமை பெண்களின் நிலைக் கண்டு வருந்தினார் பாரதி,,,,,,,, அவரிடம் ஒரு அமைதி


"இன்னாப்பா எதுமே பேசாம வர???"- என்ற குடிமகன்

"ஒன்றும் இல்லையப்பா"

"எனக்கு உன் பீலிங்க்ஸ் புரிதுப்பா ஆனா என்ன செயிய காலம் மாறி போச்சி,,,,,,,, மாத்துனவங்க அதா இருக்குறாங்க பாரு "

அவன் காட்டிய திசையில் பார்த்தார் பாரதி

பெரிய பெரிய கட்டிடங்கள் அங்கே தொலைகாட்சி ஊடகங்கள்,,,,,,,,,,,

"இவர்களா???"

"ஆமாம்ப்பா இவிங்கதான்,,, >மாமனாரை எப்படி ஏமாத்தி பணத்தை ஆட்டைய போடுறது ? -->எப்படி புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் சண்டை மூட்டி விடுறது ? -->கூட இருந்தே எப்படி குழித் தோண்டுறது ? -->எப்படி அடுத்தவள் புருஷனை மயக்குவது ? -->சொந்தகளோட சொத்தை எப்படி லபக்குவது ? ... இது போன்ற பல பொன்னான கருத்துகளை மக்களுக்கு சொல்லி தருகிறது இன்றைய தமிழ் மெகா சீரியல்கள் தான்பா.......


இது போதாதுன்னு இப்ப வர படம்லாம் குடும்பத்தோட பாக்குற மாதிரியா இருக்கு

இதெல்லாம் யோசிக்கும் போது இன்னும் 4 ரவுண்டு போடணும் நான்,,,,,,,,,,,,,"- வெறுப்பில் குடித்தான் அவன்

"இவ்வாறெனில் குழந்தைகளின் எதிர்காலம்,,,,,,,,,,??"- முழுதாக கேட்ககூட முடியவில்லை பாரதியால்,,,,,,,,,,,,,


"ஆமா இப்ப புள்ளைகளுக்கு படிப்பு தான் எல்லாம்னு ஆயிடுச்சு நான் ஸ்கூல் போன காலத்துல விளையாட நெறைய நேரம் இருந்துச்சு இடமும் இருந்துச்சு இப்பதான் அது எல்லாம் வீட போச்சே

புள்ளைகளும் வீடியோ கேம், செல்லுனு மாறிடுச்சு ,,,,,,, அதவிட கொடுமைப்பா அதுங்க துன்னுற சாப்பாடு,,,,, பீசா, பர்கர் என்ன என்ன எழவோ துன்னுதுங்க

எதிர்கால சந்ததியே நாசமா போச்சு,,,,,,,,,,"


" ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.




காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா."


தன் பாடல் வரிகளை நினைவு படுத்தி கொண்டார் பாரதி

எழுதியவர் : நிலா மகள் (2-Dec-13, 11:19 am)
பார்வை : 144

மேலே