நகர் வலம்-6

பாரதி கரிகாலனை சந்தித்தார்,,, கரிகாலன் தமிழனை தேடுவதாக சொன்னது பாரதிக்கு வியப்பாக இருந்தது

"என்ன தமிழனை தேடுகிறீரா??????? இங்கே அநேகர் தமிழ் பேசுகின்றனரே ???"

"பேசுபவன் மட்டும் தமிழனல்ல"

"உண்மைதான்,,, நீ தேடும் தமிழன் யார்???"

"பேச்சிலே தெளிவு
நடத்தையில் நேர்மை
குணத்திலே உயர்வு
மனத்திலே அன்பு

தலைகனம் இல்லா தலைமை
தனக்கென வாழா தன்மை"

இதெல்லாம் கொண்டவன் தான் உண்மைத்தமிழன்,,,,,,,,,,, இதையெல்லாம் மறந்த இவர்களா தமிழர்கள்"- ஆவேசம் பறந்தது கரிகாலன் பேச்சில்

தன்னையே தான் பார்த்து கொள்வது போல இருந்தது பாரதிக்கு,,,,,,,,,,

"செந்தமிழ் புலவரே நீர் இதை கேளும்,,,,, இந்த கண்ணான தமிழர்களின் இன்றைய நிலையை,,,

"அன்பு மறந்தான்
அண்டை வீட்டார் துணை மறந்தான்

ஆண்மை மறந்தாய்
ஆளுமை திறனும் மறந்தான்

இன்பம் மறந்தான்
இன்றியமையா குணம் மறந்தான்

ஈகை மறந்தான்
ஈசலின் ஒற்றுமை அது மறந்தான்

உணர்ச்சி மறந்தான்
உண்மையை உலகுக்கு உணர்த்த மறந்தான்

ஊக்கம் மறந்தான்
ஊமையின் வலிக்கூட மறந்தான்

எண்ணம் மறந்தான்
எங்கும் நிறைந்த பெருமை மறந்தான்

ஏற்றம் மறந்தான்
ஏட்டில் தமிழ் மறந்தான்

ஐவகை நிலம் மறந்தான்
ஐயம் என்னும் நிலை மறந்தான்

ஒற்றுமை மறந்தான்
ஒருமைப்பாடு மறந்தான்

ஓட்டம் மறந்தான்
ஓசை இடவும் மறந்தான்

ஒளவை சொல் மறந்தான்
ஒளடதம் கூட மறந்தான் "

இவனா தமிழன்,,,,,,,,,,,""


கரிகாலனின் பேச்சில் மெய்சிலிர்த்து நின்றார் பாரதி

"செந்தமிழ் புலவரே

இந்த தமிழகத்தின் நிலை கேளும்

பணமில்ல பிள்ளைக்கு பள்ளியில்லை
பள்ளிசெல்லும் பிள்ளைக்கு பாதுகாப்பில்லை

உழைப்பவனுக்கு உணவில்லை
உண்பவனுக்கு ஆரோக்கியமில்லை

பேசி பேசி பலனில்லை
பேசாமல் போகவோ மனமில்லை"

"தங்க தமிழரே நீயே நல்தமிழனாய் இருக்கையில் நீ எதற்கு தேடுகிறாய் மற்றொரு தமிழனை"

"நானா,,,,,,,,,,,,,," நகைப்பொலி

அது சிரிப்பொலியாகி,,,,,,,, சப்தமிட்டு சிரித்தார் கரிகாலன்

"ஏன் சிரிக்கிறீர் தமிழனே"

"என் தமிழ் மக்களை காக்க வந்த என்னை காலன் கொண்டு சென்று நாட்கள் பல ஆயின,,,,,

என் மக்களை காக்க யாரும் வரவில்லை,,, அதனால் நானே மீண்டு வந்தேன் காலனிடம் போராடி

என் போல நிலைகொண்டோர் யாரேனும் இருந்தால் அவர் மூலம் ஏதேனும் செய்யலாம் என்று எமன்தேசம் தாண்டி வந்தேன்

இங்கு எவன் உள்ளான் என தேடுகிறேன்"


(நாமும் வலம் வருவோம் ,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (3-Dec-13, 1:17 pm)
பார்வை : 107

மேலே