மழையே மழையே சாரல் மழையே

இந்நொடி மகிழ்ச்சி
இதயத்தில் இருக்கு....!

விழுகின்ற மழையும்
விளையாட எனக்கு...!

அம்மாவுக்கு தெரியாம
ஆடி நான் மகிழுவேன்

ஆச்சின்னு தும்மியே
ஆஸ்பத்திரி போவேன்..

காய்ச்சலும் வந்தா
கடவுள் காப்பாத்துவார்

கண்ணும் கருத்துமா
என்னைத் தேத்துவார்

எனவே

இந்நொடி மகிழ்ச்சி
இதயத்தில் இருக்கு....!

விழுகின்ற மழையும்
விளையாட எனக்கு...!

மனசே மருந்தாம்
மிரட்டுமோ நோயும்...?!

மகிழ்ந்தே நாமும்
திரட்டுவோம் இன்பம்...!

வலிகளை நினைத்தேன்
வாழ்வினை தொலைக்கவேண்டும் ?

மண்ணில் வசந்தமும் வறட்சியும்
மனதின் எண்ணங்களே......!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (3-Dec-13, 4:13 pm)
பார்வை : 86

மேலே