நிலவே திருப்பிக்கொடு

கருவாச்சி பொட்டே!!
நிறுத்திவிடு - உன்
கண்ணாம்பூச்சி ஆட்டம்.
திருப்பிக்கொடு
களவாடிபோன என் கவிதையை.

அரிதாரம் பூசி
அகம் பிரசவித்த
அழகு குழந்தை.
என் கவிதை.

இருட்டு பயம்
மிரட்டும் தனிமை
விரட்ட தவிக்கும்
குருட்டு காதலன்.
திருட்டு வேண்டாம்
பிச்சை பாத்திரத்தில்.

தொட்டா! தொட்டயிடம்
சிவப்பு நிறமாகும்.
தொட்டா சிணுங்கி போன்று
மடந்தை தனிரகம்.

முகம் பார்க்கவே
முகைகள் பூப்படைகிறது.
பார்த்துவிட்டால்
பறித்திட ஏங்கி
தலையாட்டி சம்மத்திக்குது.

அழகு மலர்
அகம் சாய்ந்திட வேண்டி
ஆண்மனம் ஏக்கமுற
எழுதுகோலின் கண்ணீர் துளிகள்
என் காதல் கடிதம்.

ஈரம் கோர்த்து கோர்த்து
கன்னத்தில் ஓதம்.
வெப்பத்தடம் வேண்டி
விண்ணபித்தக் கடிதம்.

கடலும் நீயும்
உல்லாசமாய் காதலிக்க
உலகை இருளில் முழ்த்துகிறாய்!!
கல்மனம் படைத்த
காதலியா நீ?
கடலே!!
உன் தேர்வு சரிதானோ?

இலவம் பஞ்சினும்
மென்மையானது என்னிதயம்
எரித்திட நினைப்பது
உன் குணத்திற்கு பொருத்தமற்றது.

நிலவே!!
திருப்பிக்கொடு
என் கவிதையை.
இல்லையேல்?
என் இதயத்தை
அவளிடம் ஒப்படைத்துவிடு.
ஏனெனில்
இரண்டிலும் வேற்றுமை ஏதுமில்லை.

("என் காதலிக்காக நான் எழுதிய காதல் கவிதையை நிலா திருடிட திருப்பித்தர வேண்டுகிறேன். " - கவிதையின் கரு. கருவாச்சி பொட்டு - நிலா , )
-செஞ்சி மா.மணி

எழுதியவர் : -செஞ்சி மா.மணி (4-Dec-13, 6:53 pm)
பார்வை : 93

மேலே