சமயபுரத்தாளே
காவிரி கரையோரத்திலே ஏலே லங்கடி லேலோ
காணுது பார் சமயபுரம் ஏலே லங்கடி லேலோ
சமயபுரம் கோவிலாண்டஏலே லங்கடி லேலோ
சாய்ந்து கும்மி போடுங்கடி ஏலே லங்கடி லேலோ
கோவிலுக்கு முன்னாடிதான் ஏலேலங்கடிலேலோ
குனிந்து கும்மி போடுங்கடி ஏலேலங்கடிலேலோ
கும்மி போடும் பெண்களுக்கு ஏலேலங்கடிலேலோ
குறைகளையே அம்மன் தீர்த்திடுவாள்ஏலேலங்கடிலேலோ !!!!
திரிபுர நாயகிக்கு ஏலேலங்கடிலேலோ
ஆனந்தமாய் கும்மி போடுங்கடி ஏலேலங்கடிலேலோ
ஆடிபாடும் அன்பர்களுக்கே ஏலேலங்கடிலேலோ
அருளையே அள்ளிதந்திடுவாள்ஏலேலங்கடிலேலோ !!!
ஆயிரம் கண்ணுடையாளுக்குஏலேலங்கடி லேலோ
ஆடியிலே தேர் இழுத்து ஏலேலங்கடிலேலோ
வளைந்து கும்மி போடுங்கடி ஏலேலங்கடிலேலோ
வற்றாத செல்வத்தையே தந்திடுவாள் ஏலேலங்கடிலேலோ !!!