நேற்றுக்களில் பிறந்த இன்று
பிய்ச்செறிஞ்ச அன்பையெல்லாம்
ஒன்றாக்கி எனக்குள்ளே தந்துவிட்டவளே!
என் காதல் கருவான கதை சொல்லவா!
அது நீயாக வளர்ந்த கதை சொல்லவா!
ஒரு நொடிப் பார்வையில் என் உயிரிலே
நீ குடி புகுந்த கதை சொல்லவா!
வாடகையின்றி ரகசியமாய்
நீ என்னுள் வாழ்ந்த கதை சொல்லவா!
என் மூளை மலர்களில் தேன் உறிஞ்சும்
வண்டாக ஊர்ந்த கதை அது
என் கருவிழியில் கஸ்தூரியாய்
நீ உண்டு உறங்கிய கதை அது
எட்டு வருடங்களாய் எனக்குள்ளே
எனக்கே தெரியாமல் வாழ்ந்திருந்த கதை அது
சுட்ட சூரியனையும் வெட்டிச்சாய்க்கும்
அந்த பார்வை பட்ட கதை அது...
ஏனோ உன்னைப் பார்க்க நினைக்கவில்லை
பேச நினைக்கவில்லை நானும்
என்னுள்ளே நீ இருந்ததாலா..
இல்லை உன்னுள்ளே நான் இருந்ததாலா..
அந்த சிறு சிரிப்பின் சிராய்ப்புகளில்
சிக்கித்தவித்த எனக்கு விடுதலையோ
அந்த சிரிப்பே என்னை சிறைப்பிடித்தது
என்பதனால் உன்னுள் கைதானேனோ..
உன் சுவாச வீச்சுக்களின் இடைவெளியில்
என் சுவாசம் கசிந்ததை கண்டாயோ
அதனால்தான் அடிக்கடி தடுமலுடன்
நீ தும்மலை விவாகரத்து செய்தாயோ
உன் நெற்றிப் பருக்களின் இடைவெளியில்
நான் தூங்க கட்டில் ஒன்று பேடுவாயா
அக்கட்டிலின் கால்களுக்கிடையே
என் பிள்ளையின் தொட்டிலை கட்டுவாயா
ஓகிட் பூக்களின் மறுபிறப்பாய்
ஒய்யாரமாய் உன் முகத்தினிலே
உக்காந்திருக்கும் மூக்கின் நுனியினிலே
ரோஜாப் பனித்துளியாய் வீற்றிருக்கும்
அந்த வியர்வைத் துளியினிலே கலந்து விட்டதடி
என் கண்ணீர்த் துளி
கண்ணீர்த்துளியல்ல அது என்
இதயத்து இன்பத் துளி...
உன் கண் இமைகளில் இடுக்குகளில்
ஒளிந்து விளையடுது ஏதோ ஒன்று
என்னவென்று தேடிப்பார்த்தேன் வெட்கமென்ற
புடவைகட்டிய உன் ஆசையது
அனுப்பிவிடு என்னிடம் அதை நான்
வைத்துக் கொள்கின்றேன் என் இதயத்து அறைக்குள்
பத்திரமாய் என்றென்றும் என் உயிரோடு ஒன்றாக்கி