மனதை கட்டுபடுத்து மனிதா
மனமென்னும் பேயொன்று மனிதனில் இருக்குது
மாயவித்தைகள் செய்து மனிதனை குழப்புது
இதனிடம் அகப்பட்டு இழந்தது எவ்வளவோ
இதை அறியாமல் கிடந்தது அலைபவர் எத்தனையோ .....
இங்கிருக்கும் அங்கிருக்கும்
எங்கெங்கோ அதுவிருக்கும்
இல்லம்விட்டு இமயம்போகும்
மனம் இமயம்விட்டும் இல்லம்தேடும் ............
கூடுவிட்டு கூடுபாயும் கண்மூடி திறக்கையில்
நாடுவிட்டு நாடுதாண்டும் நொடிப்பொழுதினிலே
ஒளியின் வேகத்தை மிஞ்சிடும் வேகமே
மனம் ஓயாமல் பயணிக்கும் பால்வெளி தாண்டியும் ...
இறைவனது சன்னதியில் அங்கம் வேண்டிட
எங்கோஓரிடத்தில் இது தங்கம் தோண்டிடும்
அலைகின்ற மனதிற்கு ஆசைதான் வாகனம்
இதை அடக்கிவாழ கற்றவன் ஞானிதான் உலகிலே ........
ஊர்சுற்றும் உலகம்சுற்றும் ஓர்நொடி பொழுதிலே
உருவமில்லாதா மாயமிது ஒருவருக்கும் புரியாது
அலைந்தபின் அடைந்திடும் உடற்கூடு இறுதியில்
அவஸ்தைகள் சேர்த்துக்கொண்டு புலம்பிடும் வாழ்க்கையில்
கட்டுக்குள் வைத்தவன் நிம்மத்தி பெறுகிறான்
மனதை கட்டிட மறந்தவன் உலகிலே தவிக்கிறான்
மனித துன்பத்திற்கு மனம்தான் காரணம்
மாற்றுமருந்தில்லை மனதை அடக்குதல் மருந்தடா .......
மனதின் போக்கிற்கு என்றுமே போகாதே
மனிதினை உன்னுடைய கட்டுக்குள் கொண்டுவா
வாழ்க்கையின் தத்துவம் உனக்கு புரிந்திடும்
நீ வாழ்ந்திட வாழ்க்கை உனக்கு இனித்திடும் .........
மனிதனாய் இருந்தவன் புத்தனாய் ஆனதும்
பித்தனாய் இருந்தவன் சித்தனாய் ஆனதும்
மனதினை அடைக்கிடும் மருத்துவன் கற்றதனால்
மாண்டுமே வாழ்கிறான் மண்ணிலே கடவுளாய் ..........
வறுமையும் வசதியும் வந்திடும் போயிடும்
மனம்போக மனிதன் நடமாடும் பிணம்தானே
உடல்கூட்டிலே மனதினை வைத்து காத்திடு
மனம்உடல்தாண்டா நிலையிலே வாழ்ந்துமடிந்திடு ........