என்னுயிரே புரியவில்லையா என்னுயிரே

நீ சாலையில் சேலை சூடி சென்றாய் கண்கள் உன்னை பார்க்கும் போது நெஞ்சம் நெடுஞ்சோலையாக மாறிய மாயமென்ன... சோலையில் உன் பாதம்பட வேண்டினேன் பாதம்பட காத்திருந்த மனது உன் பார்வை பட்டதும் பலகோடி பூக்களாய் பூத்தது... பூத்த மனது இன்று உன்னைத்தேடி பூவோடு அலைகிறது... பூ ஒன்றை பறித்து உன்னிடம் கொடுக்க வந்தேன் வந்த இடத்தில் கால் தடுமாறி கற்களில் மோதி குருதி வழிந்தோட எழுந்தேன் பறித்து வந்த வெள்ளை ரோஜாவோ சிவப்பாக மாறி உன் பாதத்தில் சிக்கியதென்ன... பாதத்தில் சிக்கியது பூ மட்டுமல்ல என் மனசுந்தான் தலை நிமிர்ந்து நடக்கும் உனக்கு பாதத்தில் சிக்கிய மனதின் வலி புரியவில்லை போலும்... உந்தன் மயக்கத்திலேயே இருந்ததால் ஏனவோ இதயத்தில் விபத்து என்றோ நடந்த காதல் விபத்தில் இன்று உயிர் பிரிய போகிறதே இன்னும் உனக்கு என் காதல் புரியவில்லையா என்னுயிரே...

எழுதியவர் : இதயம் விஜய் (9-Dec-13, 12:40 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 193

மேலே